search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை அகதி கைது"

    செங்குன்றம் அருகே கத்திமுனையில் வழிப்பறி செய்த இலங்கையை சேர்ந்த அகதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த சென்றம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (52). இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சென்றம்பாக்கத்தில் இருந்து வடபெரும்பாக்கத்துக்கு முருகன் வந்தார்.

    அப்போது புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேத்தீஸ்வரன் என்ற சந்திர குமார் கத்தியை காட்டி முருகனிடம் ரூ. 2 ஆயிரம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து முருகன் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து கேத்தீஸ்வரனை கைது செய்தார். இவர் மீது புழல் காவல் நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
    திருச்சியில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த இலங்கை அகதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி பெரியகடைவீதி சுகாதார தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 19), கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று கோட்டை ஸ்டேஷன் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் சுரேஷ்குமாரிடம் மெதுவாக பேச்சு கொடுத்தனர். பின்னர் இருவரும் சுரேஷ்குமாரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார் . 

    இதனைப் பார்த்த பொதுமக்கள் வாலிபர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம்  போலீசார் நடத்திய விசாரணையில் செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தவர்களில் ஒருவர் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த நிஷா (வயது 21) கல்லூரி மாணவர் என்பதும் மற்றொருவர் இலங்கை அகதி என்பதும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×